போட்டி அறிவிப்பு 4 - படம் பார்த்து கதை சொல்

போட்டி அறிவிப்பு- 4 
படம் பார்த்து கதை சொல் - 5000 ரூபாய் பரிசு

(5 வயது முதல்17 வயது வரை)

1.நீங்கள் சொல்ல விரும்பும் கதையை அப்படியே அடுத்தடுத்து ஓவியமாக வரைந்து அனுப்ப வேண்டும். 
2.குறைந்த பட்சம் பத்து படத்திலிருந்து அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். 
3.உங்கள் ஓவியமே ஒரு கதையைச் சொல்லிவிட வேண்டும்
4.ஆயில் பெயிண்டிங், க்ரேயான்ஸ், ஸ்கெட்சஸ், அல்லது வெறும் பென்சில் கோடுகள் என எதைக் கொண்டும் உங்கள் திறமையைக் காட்டலாம்

முதல் பரிசு 500 ரூபாய் - மூன்று பேருக்கு 500 * 2 = 1500
இரண்டாம் பரிசு 300 ரூபாய் - ஐந்து பேருக்கு  300 * 5 = 1500
மூன்றாம் பரிசு 200 ரூபாய் - ஐந்து பேருக்கு 200 * 5 = 1000
ஆறுதல் பரிசு 100 ரூபாய் - பத்து பேருக்கு 100 * 10 = 1000

எப்படி அனுப்புவது?
namtamilmedia@gmail.com என்கிற மின்னஞ்சலில் என்ன போட்டி என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

9566110745 என்கிற டெலக்ராம் எண்ணிலும் அனுப்பலாம். 

போட்டியின் பெயர் 
பங்கேற்பாளரின் பெயர்
புகைப்படம்
வயது
முழு முகவரி
மின்னஞ்சல் முகவரி
தொலைபேசி எண் 
ஆகிய விவரங்களுடன் அனுப்ப வேண்டும். 

படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 10, 2020

போட்டியில் பங்கேற்பவர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டியின் முடிவுகள் நம்தமிழ்மீடியா இணையத்தில் வெளியாகும். வெற்றியாளர்களின் படைப்புகள் நவம்பர் 14 வர இருக்கிற  குழந்தைகளுக்கான ஆன்லைன் பத்திரிகையில் வெளிவரும், அத்துடன் குழந்தைகளுக்கான ஆரம்பிக்க இருக்கிற யூட்யூப் தளத்திலும் வெளிவரும். 

கூடுதல் விவரங்கள் ஏதேனும் தேவைப்பட்டால் கமெண்டில் கேட்கலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்