உச்சி முதல் பாதம் வரைஅழகு பற்றி கவலை கொள்ளாத மனமே இல்லை. அழகு என்பது ஆரோக்கியத்தின் வெளிப்பாடே. ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள எல்லோருக்கும் விருப்பம்தான். ஆனால் அந்த முயற்சியில் ஏதேனும் பக்க விளைவுகள் வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற கவலையும் உடன் பிறக்கவே செய்யும். 

இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அழகை அதிகரிக்க முடிந்தால், ஆரோக்கியத்தை பெற முடிந்தால் மகிழ்ச்சிதானே. அந்த காரணத்திற்காகவே நம் தமிழ் மீடியா மற்றும் ஆதுர சாலை இணைந்து வழங்கும் ‘கிச்சனும் ஒரு கிளினிக்கே’ என்கிற நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் ஜெயரூபா அவர்கள் ஆரோக்கியம், அழகு தொடர்பான சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார்.

ஆரோக்கியம் மற்றும் அழகு தொடர்பான உங்கள் கேள்விகளை கமெண்டில் பதிவிடலாம். தனிச் செய்தியாக அனுப்ப விரும்புவோர் namtamilmedia@gmail.com என்கிற மின்னஞ்சலில் அனுப்பலாம். 95661 10745 என்கிற எண்ணில் (வாட்சப் மட்டும்) குறுஞ்செய்தி அனுப்பலாம். உங்களின் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும். 

உங்கள் பெயர் ஊர் விவரங்களுடன் அனுப்பினால் கேள்விகளின் முடிவில் அப்படியே இங்கு பதிவிடப்படும். பெயர் வெளியிட விரும்பாதவர்கள் அதனையும் தெரிவித்தே குறுஞ்செய்தி அனுப்பலாம். 

இன்று (05.09.20) மாலை 4 மணிக்கு நம் தமிழ் மீடியா லைவ் நிகழ்ச்சியில் பேசுகிறார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்