அமைதிக்கான நோபல் விருது

உலகம் முழுவதும் கடந்த நான்கு நாட்களாக பெரிதும் உரையாடப்பட்ட அந்தப்  பரபரப்பிற்கு இதோ முற்றுப்புள்ளி.
 
2020 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நொபேல் பரிசு அமெரிக்கக் கவிஞரும் யேல் பல்கலைக்கழகப் பேராசிரியருமான லூயிஸ் குலுக்கிற்கு,
( Louise Elisabeth Gluck ) வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது
" பிழையில்லா கவித்துவக் குரலும், அழகும் பொருந்திய கவிதைகளுக்காக",
( “for her unmistakable poetic voice that with austere beauty makes individual existence universal.” ) என்ற அறிவிப்புடன் இந்தப் பரிசினைப் பெறுகிறார்.
நிறைய்ய்ய விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

1993 ல் கவிதைக்கான புலிஸ்டர் விருதினையும்( "The Wild Iris" ) 2014 ஆம் ஆண்டு கவிதைக்கான தேசிய நூல் விருதினையும் ( National Book Awards 2014 for Poetry.) குறிப்பிடலாம்.ஒருகோடி சுவீடன் பணமும் நொபேல் விருதும் அவருக்கு வரும் டிசம்பர் மாதம் வழங்கப்படும்.
-------------------
அமைதிக்கான நோபல் விருது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட 318 நபர்கள் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில். அவர்களில்
211 பேர் தனிநபர்,
107 பேர் நிறுவனங்கள் சார்பில் - பார்க்கலாம்.
-----------------
இதோ இந்தியருக்கும் -
நொபேல் விருதுபெறும் 11 வது இந்தியர்.
இவர் மாணவர் போராட்டத்தின் போது
டில்லி திஹார் சிறையில் அடைக்கபட்டவர்.
----------------------------
அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பேனர்ஜி, அவரது இணையர் டுஃப்லோ பேனர்ஜி மற்றும் மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு கடந்த ஆண்டின்
பொருளாதார அறிவியலுக்கான நொபேல் பரிசு கடந்த திங்கள் கிழமை ( 5 அக்டோபர், 2020 ) அறிவிக்கப்பட்டது. உலக அளவில் வறுமை ஒழிப்பிற்குப் பங்காற்றிய "சோதனை அணுகுமுறையாக" இந்த நொபேல் பரிசு இவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப் பட்டடுள்ளது.
( பொருளாதார அறிவியலுக்கான நொபேல் பரிசு 2020 :
The 2020 Prize in Economic Sciences has not been awarded yet. It will be announced on Monday 12 October, 11:45 CEST at the earliest. )

அபிஜித் பானர்ஜியுடன் இதுவரை 11 இந்தியர்களுக்கு நொபேல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.முதன் முதலாக அந்தப் பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்தவர் ரவீந்திரநாத் தாகூர் ( 1913 ).

யாரிந்த பானர்ஜி, Abhijit Vinayak Banerjee ?
கொல்கத்தாவின் பேராசிரியப் பெற்றோரின் மகன்.
கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலையும், பொருளாதாரத்தில் முதுகலையை டில்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்திலும் (1983) பயின்றிருக்கிறார்.

டில்லி ஜே.என்.யூ மாணவர் போராட்டத்தின் போது பல்கலைத் துணைவேந்தர் பி.என். சிரிவஸ்தாவை முற்றுகையிட்டதால் டில்லி திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டவர். பின்னர் அமெரிக்காவின் ஹார்வேட் பல்கலையில் பொருளாதாரம் பற்றிய ஆய்வில் ("Essays in Information Economics.")
முனைவர் பட்டம் பெற்றார். தற்போது அமெரிக்காவின் மேஸாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் ( MIT), பேராசிரியராகப் பணியில் இருக்கிறார்.

பேராசியர் முனைவர் அருந்ததியுடனான அவரது முதல் திருமணம் நிலைக்கவில்லை. அவர்களது மகன் கபீர் பேனர்ஜி 2016 ல் நடந்த ஒரு விபத்தில் பலியாகிவிட்டார் - நிற்க.

2015 ஆம் ஆண்டு தனது சக ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான முனைவர் எஸ்தர் டுஃப்லோவை, Esther Duflo, மணக்கிறார். தம்பதியினராக இணைந்து நொபேல் பரிசுபெறும் ஆறாவது இணையர்கள் இந்த பேனர்ஜிக்கள். பொருளாதாரத்திற்கான நொபேல் பரிசுபெறும் இரண்டாவது பெண் எஸ்தர் டுஃப்லோ. கடந்த ஆண்டுவரை 53 பெண்கள் நொபேல் பரிசு பெற்றுள்ளனர்.

இந்தத் தம்பதினர் பொருளாதார அறிவியல் தளத்தில் அசாத்திய சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.
தொடர்ச்சியாக வறுமை ஒழிப்புத் தளத்திலும் பணியாற்றி வருகின்றனர். தனியாகவும் இணையருடன் சேர்ந்தும் எட்டுக்கும் மேற்பட்ட பொருளாதார அறிவியல் நூல்களை வெளியிட்டுள்ளார். தனது இணையருடன் இணைந்து வெளியிட்ட "ஏழை பொருளாதாரம்"( "Poor Economics" )  நூல் பிரசித்திபெற்றது.

23 வது இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், கீதா கோபிநாத், மிஹிர் சர்மா ஆகியோருடன் இணைந்து "பொருளாதாரத்திற்கான இப்போதயத் தேவை என்ன ?" எனும் கட்டுரைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார் அபிஜித் பானர்ஜி.

இந்தியாவில் மும்பையில் பிறந்த அபிஜித் பேனர்ஜியும், பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் பிறந்த டுஃப்லோவும் முற்றிலும் வித்தியாசமான இடங்களில் வளர்ந்தவர்கள். பொருளாதார வறுமைதான் அவர்களைப் பல்கலைக்கழக வளாகத்திலேயே ( MIT ) இணைத்திருக்கிறது.

பொருளாதாரச் சந்தை எந்த அளவுக்கு ஏழைகளுக்கு உதவி இருக்கிறது என்பதை அறியவும், வறுமையைப் புரிந்து கொள்ளவும் 2003 ஆம் ஆண்டு அப்துல் லத்தீப் ஜமீல் ஆய்வு ( The Abdul Latif Jameel Poverty Action Lab (J-Pal) at MIT ) மையத்தை இருவரும் இணைந்து தொடங்கினர்.

இப்ப, இந்தப் பேனர்ஜி தம்பதியினரைத் தமிழ்நாட்டிற்கும் அழைத்து வருவோம்.தமிழகத்திற்கு அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டூஃப்ளோ பேனர்ஜி இணைந்து ஆற்றிய சேவை குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம் கேட்போம்.

 "இந்தியாவில் பிறந்த சர்வதேச பொருளாதார மேதையான அபிஜித் பேனர்ஜி பொருளாதார ஆராய்ச்சியாளராகவும் பேராசிரியராகவும் திறம்பட பணியாற்றி வருபவர். அபிஜித் பேனர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ பேனர்ஜி ஆகிய இருவரும் இயக்குநர்களாக உள்ள J-PAL நிறுவனமும் தமிழ்நாடு அரசும் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு இதுவரை 7 துறைகளில் 15 ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது."

அபிஜித் பேனர்ஜிக்கும், எஸ்தர் டுஃப்லோக்கும் 2015 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. ஆனால், அதற்கு முன்பே இவர்கள் தொடர்ந்து வறுமை ஒழிப்பில் பணியாற்றி வருகின்றனர்.

மோடி அரசு பணமதிப்பிழப்பைக் கொண்டு வந்த போது அதனைக் கடுமையாகச் சாடியவர் அப்ஜித் பேனர்ஜி. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு பேசிய அபிஜித் பானர்ஜி, இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை தள்ளாட்டத்தில் உள்ளது எனவும் நிலையான வளர்ச்சி என்பதற்கான உறுதி தற்போது முற்றிலுமாக இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டது எனவும் தெரிவித்திருந்தார்.

உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நொபேல் பரிசு 2020.
அமெரிக்க அறிவியலாகள் ஹார்வி ஜே. ஆல்டெர், சார்ல்ஸ் எம். ரைஸ், இங்கிலாந்து அறிவியலாளர் மிஷெல் ஹோட்டன் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் "ஹெபடைட்டிஸ் சி" வைரஸைக் கண்டறிந்துள்ளனர். அதற்கு முன்பு வரை "ஹெபாடைட்டிஸ் ஏ" மற்றும் "ஹெபாடிடிஸ் பி" வைரஸ்கள் குறித்த கண்டுபிடிப்பே முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது.

இயற்பியலுக்கான நொபேல் பரிசு 2020 :

பிரிட்டனின் ரோஜர் பென்ரோஸ், ஜெர்மனியின் ரெய்ன்ஹார்ட் கென்ஸல் மற்றும் அமெரிக்காவின் ஆன்டிரியா கெஸ் ஆகிய மூவருக்கும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இவர்களது கண்டுபிடிப்புகள் இந்த அண்டத்தையும் கருந்துளைகளையும் நவீனப் புரிதலுக்கான வழிகளைச் செழுமைப் படுத்துகின்றன. மூன்று அறிவியலாளர்களில் பாதிப்பரிசு கருந்துளைகள் ஆராய்ச்சிகளுக்காக பென்ரோஸிற்கும் மீதப் பாதியை மற்ற இரு அறிவியலாளர்களும் பகிர்கின்றனர்.

ரோஜர் பென்ரோஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் கோட்பாடின் அடிப்படையில் கருந்துளைகள் உருவாகும் விதம் குறித்த ஆராய்ச்சியை முன்னெடுத்தவர். இவர் ஸ்டீஃபன் ஹாக்கிங் உடன் இணைந்து கருந்துளைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர். அவருடன் இணைந்து 'எடிங்க்டன் மெடல்' உள்ளிட்ட சில விருதுகளையும் வென்றிருக்கிறார். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நொபேல் விருதுகளை வென்ற நூற்றாண்டு நெருங்கும் வேளையில் அவரின் 'பொதுச் சார்பியல் தத்துவம்' குறித்த ஆய்வுகள் இந்த ஆண்டு விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரெய்ன்ஹார்டு கென்ஸல் மற்றும் ஆன்ட்ரியா கெஸ் இருவரும் இரண்டு ஆராய்ச்சிக் குழுக்கள் மூலமாக நமது பால்வீதி மண்டலத்தின் (Milky Way) மையப் பகுதி குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அதிகத் திறன் வாய்ந்த தொலைநோக்கிகள் மூலமாக பால்வீதி மண்டலத்தின் மையத்தை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டனர். இவ்வாராய்ச்சியின் முடிவில் நமது பால்வீதி மண்டலத்தின் Sagittarius A* எனும் மையப்பகுதியில் மிக அதிக நிறை கொண்ட, புலனாகாத பருப்பொருளின் - (The  supermassive compact object) இருப்பைக் கண்டறிந்துள்ளனர்.

வருடந்தோறும் ஆல்ஃப்ரட் நொபேல் நினைவுதினமான டிசம்பர் 10 ஆம் நாள் சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரத்தில் நொபேல் பரிசுகள் வழங்கப்படும்.

வாழ்த்துகள்,
அனைவருக்கும்.
பென்ஸி

கருத்துரையிடுக

0 கருத்துகள்