அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்படுவாரா?

மும்பையில் பொய்யான TRP ஊழலில் மூன்று செய்தி சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஃபேகட் மராதி, பாக்ஸ் சினிமா மற்றும் ரிபப்ளிக் டிவி ஆகிய மூன்று சேனல்கள் டி.ஆர்.பி ஊழலில் ஈடுபட்டிருப்பதாக மும்பை போலீஸ் கமிஷனர் கூறியிருக்கிறார்.

ஊடகங்களுக்கான தரவரிசையில் எந்த சேனல்களை மக்கள் அதிகம் பார்த்திருக்கின்றனர் என்பதை டி.ஆர்.பி வைத்தே கணித்து வருகின்றனர். 

ரிபப்ளிக் டிவியின் நிர்வாக இயக்குனரான அர்னாப் கோஸ்வாமி ஃப்ராங்க்ளி ஸ்பீக்கிங் வித் அர்னாப் என்ற பிரபலமான நிகழ்ச்சியை வழங்கியவர். இந்த டி,ஆர்.பி. ஊழலின் பின்னணி என்ன? ஏன் இது நடத்தப்பட்டது? என்கிற விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில் ரிபப்ளிக் டிவியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

டி.ஆர்.பி. மோசடியில் சிக்கியிருக்கும் அர்னாப் ரஞ்சன் கோஸ்வாமி கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் இந்த வழக்கை விசாரிக்கும் மும்பை போலீஸ் கமிஷனர் மாறுதல் என்ற தகவல் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

The nation wants to know என்று அடிக்கடி கூறும் அர்னாப் அவர் மீது சுமத்தப்படிர்ருக்கும் டி.ஆர்.பி ஊழல் மோசடிக்கு என்ன பதில் சொல்வார் என்று தேசமே அறிய காத்திருக்கிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்