மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்

மத்திய நுகர்வோர் மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக இருந்தவர் ராம்விலாஸ் பாஸ்வான். இவருக்கு வயது 74. அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தவர். 

கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு இதய அறுவைச்  சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் சிகிச்சைபலனின்றி இன்று (அக்டோபர் 8, 2020) காலமானார்.

லோக் ஜனசக்தியின் தலைவராக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் எம்.பியாக எட்டுமுறை இருந்தவர். பீகாரில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர். அண்ணல் அம்பேத்கரை பின்பற்றி தலித் மக்களுக்காக பாடுபட்டவர். 



கருத்துரையிடுக

0 கருத்துகள்