கெளதம் வாசுதேவ் மேனன் படத்தில் அமலா பால்

சமீப காலங்களில் ’அந்தாலஜி’ வகை திரைப்படங்கள் எடுப்பதில் கவனம் செலுத்துகிறது கோலிவுட். 

மூன்று வருடங்களுக்கு முன் ’6 அத்தியாயம்’என்ற படம் ஆறு இயக்குனர்கள் இயக்கிய ஆறு குறும்படங்களைக் கொண்டதாக இருந்தது. 

சமீபத்தில் ‘புத்தம் புது காலை’ என்கிற திரைப்படம் நான்கு இயக்குனர்கள் இயக்கி அமேசான் ப்ரைமில் வெளியானது. லாக் டவுனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படங்களாக இருந்தன. 



இப்போது இயக்குனர் ஏ.எல்.விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு, இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நான்கு இயக்குனர்களின் குறும்படங்கள் ‘அந்தாலஜி’ படமாக விரைவில் வெளி வர இருக்கிறது. 



இதில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் அமலா பால் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்