நிவர் புயலைத் தொடர்ந்து தமிழகம் வரும் மற்றுமொரு புயல்?

இன்னும் நிவர் புயல் கரையைக் கடக்காத நிலையில் காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்துவருகிறது. நாளையும் 13 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் நிவர் புயல் சென்னையில் கரையைக் கடக்கவும் வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது இணையப் பக்கத்தில் கூறியுள்ளார். 

  ‘நிவரை அவரோட பிரதர் பின் தொடர்ந்து வருகிறார். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்’ என்கிறார் பிரதீப் ஜான். 


நிவர் புயலுக்கு பேரிடர் மேலாண்மை கூறியிருக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவதுடன் அடுத்து வரும் புயலுக்கும் விழிப்புணர்வுடன் செயல்படுவது முக்கியம். கடந்த சில ஆண்டுகளில் எத்தனை புயல்கள் வந்திருக்கின்றன என்பதை பூவுலகின் நண்பர்கள் காலநிலை மாற்றத்தின் எதிர்வைனைகள் என்று சொல்வது இப்போது உணரத்தக்கதாய் இருக்கிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்