உருவானது புரவி புயல்

மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக  மாறியிருக்கிறது. இந்த புதிய புயலுக்கு புரவி என்கிற பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

அடுத்த 36 மணி நேரத்தில் இலங்கை, தமிழகம் மற்றும் கேரளாவின் கடற்கரையோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். மணிக்கு 50 கி.மீ முதல் பலத்த காற்று வீசக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் முன்னெச்சரிக்கையாக முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

புரவி புயலால் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 6 வரை தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்