டிசம்பர் 2 முதல் 6 வரை தமிழகத்தில் கன மழை - இலங்கை மற்றும் கேரளாவில் வெள்ளத்திற்கு வாய்ப்பு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து 
சென்னை, நாகை, காரைக்கால், கடலூர், எண்ணூர், பாம்பன், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, தூத்துக்குடி, குளச்சல், ராமேஸ்வரம் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
இந்த புயலானது இலங்கையின் மலைப் பிரதேசங்கள் வழியாக மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி வழியாக அரபிக் கடலை சென்றடையும். 

இதன் காரணமாக தேனி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, குன்னூர், கொடைக்கானல், பாபநாசம், மாஞ்சோலை பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். 

நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளிலும், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கையிலும் டிசம்பர் 2 முதல் 5 வரை கனமழை பெய்யக்கூடும். 

மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு. 

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் பகுதிகளிலும் டிசம்பர் 3 முதல் 6 வரை மழை பெய்யக்கூடும். 

டிசம்பர் 2ம் தேதியில் சென்னையிலும் மழை உண்டு. நிவர் போன்று காற்று அதிகமில்லாமல் மழைபெய்யக்கூடும். 

ஒட்டுமொத்தமாக டிசம்பர் 2 முதல் 6 வரை தமிழகத்தில் கன மழை பெய்யக்கூடும்.  

கேரளாவிலும் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா ஆகிய பகுதிகளில் கன மழை பெய்யக் கூடும். திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் பகுதிகளில் மிக மிக கன மழை பெய்யக்கூடும். திருவனந்தபுரத்தைச் சுற்றிலும் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 
இலங்கையில் யாழ்ப்பாணம் மற்றும் வட கிழக்கு மாகாணங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. அத்துடன் சூறாவளியும் தாக்கக்கூடும். இதனால் இலங்கையின் சில பகுதிகள் வெள்ளம் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. 

டிசம்பர் 3, 4 மற்றும் 5 தேதிகளில் இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில் 50/60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இதனால் கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

அதுமட்டுமின்றி இலங்கை, தமிழகம் மற்றும் கேரள மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். 

இவ்வாறு தமிழ் நாடு வெதர் மேன் ப்ரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்