புயலால் சென்னையில் மின்சாரம் நிறுத்தப்படுமா?

பாண்டிச்சேரி மற்றும் சென்னைக்கு இடையில் புயல் கரையைக் கடக்க வேண்டிய மையத்துக்கு வரும் நேரத்தில் இருந்து அது மையத்தில் நிலைகொண்டு கரையைக் கடக்கும் நேரம் வரை தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வுகள் எச்சரிக்கிறது.

இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 
இதனால் அந்த நேரத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கவும் தயார் நிலையில் இருப்பதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்சாரம் தொடர்பாக எங்கேனும் பிரச்சினை என்றாலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும், மின்சாரம் தொடர்பான வேறு பிரச்சினைகள் என்றாலும் மின்சார வாரியத்தைத் தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை தெற்கு 1, தெற்கு 2, வடக்கு, மையப்பகுதி, மேற்கு என சென்னையின் அனைத்து பகுதிகள் மற்றும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மக்களும் தொடர்பு கொள்ள உதவி ஆணையாளர்களின் தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த எண்களில் தொடர்புகொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்