இந்திய ஊடகங்களில் பேச மறுக்கும் விவசாயிகள்

தொலைக்காட்சி ஊடகங்கள் எங்களைப் பற்றி பேசாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகளான நாங்களும் பிரபல ஊடகங்களில் பேச தயாராக இல்லை என்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் உள்ளூர் செய்தி சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளனர். 
 
நாங்கள் விவசாயிகள்; தீவிரவாதிகள் அல்ல என்ற கோசமும் போராட்டத்தில் ஒலிக்கத் துவங்கியுள்ளது. 
குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் திரண்டு விவசாயிகளுக்கான போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவு என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். 

தேசத்தின் பிரதான பிரச்சினை என்பது பிரதமரைப் பொறுத்தவரை இந்து - முஸ்லீம் பிரச்சினையாகத்தானே இருக்கிறது என்று உத்திர பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் குரல்.

விவசாயிகளுக்காகத்தானே கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அவர்களின் வருமானம் இரண்டு மடங்கு உயரும் என்று கூறியது. வருமானம் அதிகரிக்கும்போது யாராவது அதற்கு எதிராக போராடுவார்களா? போராடுகிறார்கள் எனில் அதன் உள்ளிருக்கும் விஷயம் அவர்களுக்கு புரிந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்.

மத்திய அரசு விவசாயிகள் குரலுக்கு செவிசாய்த்தாக வேண்டும். அடிப்படை உரிமைக்காக போராடும் அனைவருக்கும் நீதி கிடைத்தே ஆக வேண்டும். நியாயம் வழங்கியே தீர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. 

விவசாயிகள் இல்லையென்றால் உணவில்லை என்கிற உண்மை புரியாத ஒரு அரசைக் கொண்டிருக்கும் இந்த தேசத்தை காப்பாற்ற விவசாயிகளே களமிறங்கியுள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்