வரலாறு காணாத கடும்குளிரில் விவசாயிகள் போராட்டம்

இந்தியத் தலைநகர் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் உரிமைக்கான போராட்டம் உலகளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஒரு நியாயமான காரணத்திற்காக அமைதியான வழியில் போராட அனுமதிப்பது அடிப்படை உரிமை என்பது இந்த அரசுக்கு எப்படி தெரியாமல் போனது? கனட பிரதமர் அதை சுட்டிக் காட்ட வேண்டிய நிலைக்கு இந்திய அரசு நடந்துகொண்டிருக்கிறது. கனட அரசு விவசாயிகள் போராட்டத்தை மதிக்கிறது. இந்திய அரசு இன்னும் எத்தனை நாளைக்கு மெளனத்தால் சாதிக்கப் போகிறது? 

கனட நாட்டு சட்டசபையில் இந்திய விவசாயிகள் தாக்கப்படுவது குறித்தும், அவர்கள் பாதுகாப்பும் உரிமையும் குறித்தும் அந்நாட்டு உறுப்பினர் கரட்டன்சிங் பேசியிருக்கிறார்.

இந்த சமூகத்தின் முதுகெலும்பே விவசாயிகள்தான். ஒவ்வொரு மனிதனின் உணவுத் தேவையை நிறைவேற்றும் அந்த விவசாயிகள்தான் இந்தியாவில் தாக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசின் நியாயமற்றப் போக்கைக் கண்டிப்பதும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதும் முக்கியமான கடமையாகும் என்று அவர் பேசியிருக்கிறார். 


தலைநகர் டெல்லியில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் குளிர் பதிவாகி உள்ளது. 1949க்கு பிறகு இந்த ஆண்டு நவம்பர் மாதம் மிக மோசமான குறைந்தபட்ச குளிர் பதிவாகியுள்ளது. இந்த மிக மோசமான கடும்குளிரில்தான் தனது உரிமைகளுகாக விவசாயிகள் போராடி வருகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தலைநகரில் 250க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து போராடி வரும் போராட்டத்திற்கு கனடாவில் மட்டுமின்றி ஆஸ்திரேலியாவிலும் ஆங்காங்கே இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடந்துவருகிறது. பேனர்களில் புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், விவசாயிகள் பாதுகாப்பு குறித்த வாசகங்களை ஏந்தியும் போராட்டம் செய்துவருகின்றனர். 

விவசாயிகளுக்கு ஆதரவாக உலக அளவிலான குரல்கள் இன்னும் ஓங்கி ஒலிக்கும். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்