நாளை அரசு விடுமுறை

புயல் காரணமாக பேருந்து, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை அரசு விடுமுறையாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஏற்கனவே நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது புயலின் தீவிரம் அதிகமாக இருப்பதால் போக்குவரத்தை ரத்து செய்ததோடு அரசு விடுமுறையெனவும் அரசு அறிவித்துள்ளது.’வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, 24ந்தேதி முதல் 25ந்தேதி வரை பெரும் மழையும், புயலும் இருப்பதால், எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’ என்று அறிவித்திருந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அரசு விடுமுறை என அறிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் அரசு விடுமுறையாக இருந்தாலும் அத்தியாவசியப் சேவைகளில் இருப்போர் மட்டும் நாளை பணியில் இருப்பார்கள் என்றும் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். 

சென்னையில் விட்டு விட்டு கன மழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்