பிரபல கால்பந்தாட்ட வீரர் மாரடோனா மரணம்

பிரபல கால்பந்து விளையாட்டு வீரரான டியாகோ மாரடோனா மாரடைப்பின் காரணமாக இறந்துவிட்டதாக அவருடைய வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த அவருக்கு வயது 60. மூளையில் ஏற்பட்ட இரத்தகசிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாரடோனா இரண்டு வாரங்களுக்கு முன்பு வீடு திரும்பியிருக்கிறார். 
சேகுவேராவின் மீது கொண்ட பற்றால் தனது காலில் அவரது உருவத்தை டாட்டூவாக போட்டிருந்தார். 

1986 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அர்ஜெண்டினா உலகக் கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர். 

குடிக்கு அடிமையாக இருந்தவர் அதற்கான சிகிச்சையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஓய்வுக்காலத்தில் பலமுறை பலகாரணங்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டடிருக்கிறார். 2000 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புன்வரைசென்று திரும்பியவர். கொகைன் அவரது இதயத்தை கடுமையாக பாதித்திருந்தது. அதற்கடுத்து குடியால் கல்லீரல் பாதிக்கப்படிருந்தது. மது போதையின் காரணமாக கால்பந்து விளையாட்டில் இருந்து சில மாதங்கள் விளையாட தடையும் விதிக்கப்பட்டிருந்தது. 

திறமையும் புகழும் மட்டுமில்லாமல் சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரராக இருந்த கால்பந்தாட்ட வீரரான மாரடோனாவின் மறைவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. 

 உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி தெரிவித்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்