நவம்பர் 29ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - அடுத்த புயலுக்கு தயாராகும் தமிழகம்

இப்போதுதான் நிவர் புயல் தமிழகத்திற்கு வந்து சென்றது. அதற்குள் அடுத்த புயலுக்கான அறிவிப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன. 

இன்னும் 24 மணி நேரத்தில் இருந்து 36 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும். இது கோம் வழியாக கோமோரின் கடலிலிருந்து அரபியன் கடலுக்கு நகர்ந்து செல்லும்.
இதனால் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக தென் தமிழ்நாடு, டெல்டா பகுதிகள், உள் மாவட்டங்கள், மேற்கு தமிழ்நாடு ஆகியவை மழை பெறும். சென்னையிலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

மத்திய வங்கக்கடலில் உருவாகும் இந்த புயலானது டிசம்பர் 2ஆம் தேதி நாகப்பட்டினத்தில் கரையைக் கடக்கக் கூடும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்