புயல் காரணமாக 13 மாவட்டங்களுக்கு நாளையும் விடுமுறை

தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், நிவர் புயல் கரையைக் கடக்க ஏற்படும் தாமதத்தாலும் நாளையும் விடுமுறை என அறிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. 

இதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை.திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர்  உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கும்  விடுமுறை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

முன்னதாக கொட்டும் மழையில் குடைபிடித்தும் நனைந்தபடி செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரத்தைப் பார்வையிட்ட முதல்வர் ஏரியின் நீர் திறப்பு தற்போது 1000 கன அடி வீதம் திறக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்படுள்ளதாகக் கூறினார்.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்