தீவிரமாகும் நிவர் புயல் - 27 ஆம் தேதி வரை நீடிக்கும் மழை - வானிலை ஆய்வாளர் பாலச்சந்திரன்

வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியிருப்பதாவது 

நிவர் புயல் காரணமாக தொடர்ந்து நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. 

நிவர் புயல் நாளை 25ம் தேதி புதுச்சேரி அருகே கரையைக் கடக்கக் கூடும். 

 அப்போது நாளை முற்பகல் முதல் இரவு வரை பலத்த காற்று வீசக்கூடும்.

எதிர்பார்த்ததை விட டெல்டா மாவட்டங்களிலும், வட தமிழகத்திலும் மழை தீவிரமடைந்துள்ளது. 


புயலின் தீவிரம் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கன மழை பெய்யக்கூடும். 

நாகை, மயிலாடுதுறை, காரைக்காலில் அதீத கனமழை பெய்யக்கூடும்

பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டையில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். 

நவம்பர் 27 ஆம் தேதி வரை மழை தொடரும் என கூறியுள்ளார். 

நிவர் புயலில் பாதிப்பு குறித்து தொடர்பு கொள்ள கொடுக்கப்பட்டுள்ள எண்கள் 
044 2538 4530
044 2538 4540

கருத்துரையிடுக

0 கருத்துகள்