கஜா புயலை மிஞ்சும் நிவர் புயல், ஏன்?

பல மணி நேரத்திற்கு தொடருமா கனமழை?
சென்னையில் கரையைக் கடக்கிறதா நிவர் புயல்?

நிவர் புயல் வானிலை ஆய்வுகளின் கணிப்புகளைப் பொய்யாக்கிவிட்டதா? இயற்கையின் போக்கை அவ்வளவு எளிதில் யூகித்துவிடவும் கூடுமா? என்கிற பல கேள்விகளுக்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிலளித்திருக்கிறார்.

1. நிவர் புயல் தற்போதையை நிலவரம் என்ன?

சென்னைக் கடற்கரையிலிருந்து 300 கி.மீ தொலைவில் இலங்கையின் வட கிழக்கே நிலைகொண்டிருக்கிறது நிவர் புயல். ஏற்கனவே 100 கி.மீ வேகத்தில்  காற்று சுழன்றடிக்கிறது. இந்த அழுத்தம் இன்னும்கூட அதிகமாகலாம். 
2. தமிழகத்தில் எந்த இடத்தில் புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது, ஏன்?

இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாத நிலை உள்ளது. இன்னும் காத்திருந்து நிவர் புயலின் போக்கைப் பார்த்தால் அது கரையைக் கடந்தபின்பு தான் தெரியும்போல இருக்கிறது.  ஐரோப்பிய நாடுகளின் வானிலை, பிரிட்டிஷ் வானிலை மற்றும் ஜெர்மன் வானிலை ஆய்வுகளின் கணிப்பு படி சென்னைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே மகாபலிபுரத்தில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 
வட அமெரிக்கா, அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு வானியல் ஆய்வுகளின்படி காரைக்கால் / பறங்கிப்பேட்டை பகுதியில் கரையைக் கடக்கும் என்கிறார்கள். நாம்தான் அமெரிக்கா என்ன சொன்னாலும் கேட்போமே, அதனால் இந்திய வானியல் ஆய்வுகளும் டெல்டா பகுதியில் கரையைக் கடக்கும் என்றே சொல்கிறது. 

ஆனால் வானிலையின் கணிப்புகளைப் பொய்யாக்குவதில் நிவர் புயல் கில்லாடி. கட்சித் தாவல் அதிகம் இருக்கிறது. இன்னும் 24 மணி நேரம் அல்லது 25 ஆம் தேதி மாலை நிவர் புயலின் நிலையைப் பொறுத்துதான் உறுதிப்படுத்த முடியும். 

எனது கணிப்பின்படி பசிபிக் பகுதியில் நிலவரத்தைப் பார்த்தால் வடக்கு, வடமேற்கு பகுதிக்கு அதிக வாய்ப்பிருக்கிறது. நிவர் கொஞ்சம் வலுவிழந்தால் டெல்டா பகுதிக்கு வாய்ப்புள்ளது. எனவே டெல்டா  பகுதி மக்களுக்கு மழை வரலாம். ஆனால் புயல் வர வாய்ப்பில்லை. 
புரியும்படி சொல்வதென்றால் புயல் அழுத்தம் குறைந்தால் பள்ளம் என்றும் அழுத்தம் அதிகமானால் மேடு என்றும் புரிந்துகொள்ளலாம். அதனால் சென்னை மற்றும் பாண்டிச்சேரி இடையே கல்பாக்கம் அல்லது மகாபலிபுரத்தில் சில கி.மீ தூரத்தில் புயல் கரையைக் கடக்கலாம். 25 ஆம் தேதி இரவு அல்லது 26 ஆம் தேதி காலை கரையைக் கடக்கும்.

ஒருவேளை மகாபலிபுரத்துக்கும் சென்னைக்கும் இடையே புயல் கரையைக் கடக்கவும் சிறிது வாய்ப்பிருக்கிறது. புயலின் போக்கில் சின்ன மாற்றம் ஏற்பட்டால் சென்னையில் கரையைக் கடக்கவும் வாய்ப்புள்ளது. 

3. கஜா புயலை மிஞ்சுமா, நிவர்? 

நிவர் புயல்  Inflow (inhale)  ஆகும்போது நான்கு கி.மீ உயரம் வரைக்கும் செல்கிறது. Out Flow (Exhale) ஆகும்போது 10 - 12 கி.மீ உயரம் வரைக்கும் செல்ல வாய்ப்பிருக்கிறது. 

Wind shere  5 - 10 நாட் இருந்தாலே புயலுக்கான தீவிரம் இருக்கும். இப்போது கடந்து வருவதைப் பார்க்கும்போது 40 நாட் இருக்கிறது. எனவே சில மணி நேரத்தில் அதி தீவிரமாக சூறாவளியாவதைப் பார்க்க முடிகிறது. 

எனவே நிவர் புயலை ஒன்றுமற்றது என்று சொல்லிவிட முடியாது. கஜா புயலை விட தீவிரமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.  

4. காற்றின் வேகம் எப்படி இருக்கும்?

காற்றின் வேகமானது தானே புயலைப் போல இருக்கும். தானே புயலின் போது மணிக்கு 140 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் வடக்கு பகுதியில் இருக்கும் ஈசிஆர் பகுதியில் நல்ல காற்று கிடைக்கக்கூடும். 26 ஆம் தேதி காலை சென்னை மக்களும் இதனை எதிர்பார்க்கலாம். 140 km/hr – Pondy – Marakannam- Mahbas coasts (mid-night to morning of 26th)
100 km/hr – Cuddalore coast (midnight of 25th)
100 km/hr – Chennai Coast (26th morning)
100 km/hr – Chengalpet and Kancheepuram (26th morning)
80-90 km/hr – Ranipet, vellore and Tiruvallur (26th Noon)

5. எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

26 ஆம் தேதி மாலை வரைக்கும் மழைக்கு வாய்ப்புண்டு. 

கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு பகுதிகளில் அதி தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் பகுதிகளில் கனமழை பெய்யும்.

மற்ற பகுதிகளில் 26 ஆம் தேதி காலை புயல் கரையைக் கடக்கும்போது மழை கிடைக்க வாய்ப்புள்ளது. கடற்கரை பகுதிகளில் 25, 26 இருநாட்களிலும் மழை இருக்கும். புயல் கரையைக் கடக்க அதன் மையத்தை அடையும் நேரத்தில் மேற்சொன்ன மாவட்டங்களில் சில மணி நேரங்களுக்கு மழை தொடர்ந்து பெய்யும். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்