ஓலா, ஊபருக்கு வருகிறது புதிய கட்டுப்பாடு

ஓலா, ஊபர், ரெட் டாக்ஸி போன்ற கைப்பேசி செயலிகள் மூலம் வாடகைக் கார்களை ஒருங்கிணைக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. 

இதுவரை ஓலா, ஊபர் புக் பண்ணும்போது பீக் அவர் என்றும், மழை போன்ற காரணங்களாலும் நார்மல் கட்டணத்தை விட அதிகபட்ச  கட்டணங்களை வசூலித்து வந்தன.  அதே போல் சில நேரங்களில் தூரம் அதிகமாக இருக்கிறது என டிரைவர்களே கேன்சல் செய்வதும் அதிகமாக இருந்து வந்தது. இதனால் சில நேரங்களில் கஸ்டமர்களுக்கு 15 ரூபாய் கட்டணம் அபராதம் போல் விதிக்கப்பட்டும் வந்தது. 
இனி உச்சப்பட்ச கட்டணமானது சராசரி கட்டணத்திலிருந்து ஒன்றரை மடங்குக்கு மேல் இருக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு பயணத்தை ஓட்டுனர் தன்னிச்சையாக ரத்து செய்தால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல 12 மணி நேரங்களுக்கு மேல் ஒரு ஓட்டுநர் பணியில் இருக்கக் கூடாது. 12 மணி நேரப்பணிக்கு பின்னர் 10 மணி நேரம் ஓய்வெடுத்த பிறகே மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும். 12 மணி நேரத்திற்கு மேல் ஒரு ஓட்டுநரால் ஓலா, ஊபர் போன்ற செயலிகள் மூலம் வாகனம் ஓட்ட முடியாது. 10  மணி நேரத்திற்கு பிறகு லாகின் செய்து செயலிக்குள் செல்ல முடியும். 

அதுமட்டுமின்றி வாடகை கட்டணத்தில் 80 சதவீதத்தை ஓட்டுநருக்கு ஓலா, ஊபர் தர வேண்டும். இப்படி இன்னும் சில தடைகளையும், புதிய கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்துள்ளது. 

மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர்களுக்கான நெறிமுறைகள் 2020ல் இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்