பள்ளிகரணைக்கு ஆபத்து

பள்ளிக்கரைனை சதுப்புநில நீர்நிலையைத் தூர்வாரி ஆழப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

’சதுப்பு நிலப்பகுதிகளை ஆழப்படுத்தி காம்பவுண்ட் சுவர் எழுப்பி தண்ணீர் நிரப்ப பள்ளிக்கரணை சதுப்புநிலம் கார்ப்பரேஷன் தண்ணீர்த் தொட்டியல்ல. மாறாக ஆயிரக்கணக்கானப் பறவைகள், மீன்கள், ஊர்வன, இருவாழ்விகள், தாவரங்கள், பாலூட்டிகளுக்கு நகரில் எஞ்சியிருக்கும் ஒரே இறுதிப் புகலிடம். அதை நீர்த்தொட்டிப் போன்று கையாள்வது பெரும் பல்லுயிரின அழிப்புக்கு வழிவகுக்கும்’ என்று பூவுலகின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். 
துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டு அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து அரசு முடிவெடுக்கிறதா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. 

அரசு எப்படியான குழுவைக் கொண்டிருக்கிறது? ஒவ்வொரு விஷயத்திற்கும் பிரச்சினைக்கும் தீர்வு எட்டுவதற்கு பதிலாக இன்னும் சிக்கலையும் அழிவையும் ஏற்படுத்துவது வேதனையானது என்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்