பிரபல இயக்குனர்களின் ‘பாவக் கதைகள்’

சேபி

பாலிவுட்டின் பிரபல இயக்குனர்களான அனுராக் கஷ்யப், கரன் ஜோகர், ஷோயா அக்தர் மற்றும் திபாகர் பானர்ஜி ஆகியோர் இயக்கிய ’அந்தாலஜி’ படங்களான lust stories , ghost stories போன்றவை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக Lust stories ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. 
அதே பாணியில் தமிழிலும் ஒரு அந்தாலஜி படத்தை வெளியிட நெட்பிளிக்ஸ் திட்டமிட்டது.  இந்த படம் டிசம்பர் 18ல் "பாவக் கதைகள்" என்ற பெயரில் வெளியாகிறது. இதனை பிரபல இயக்குனர்களான வெற்றிமாறன், சுதா கோங்கரா, கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
இதில் பல முன்ணணி நடிகர்கள் நடிக்கின்றனர். சமீபத்தில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. 
சுதா இயக்கும் படத்திற்கு "தங்கம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில்  காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, பவானிஸ்ரீ ஆகியோர் நடிக்கின்றனர்.
விக்னேஷ் சிவன் இயக்கும் படத்திற்கு "லவ் பண்ண உட்றனும்" என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் அஞ்சலி, கல்கி கோச்லின், படம் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றிமாறன் இயக்கும் படத்தின் பெயர் "ஓர் இரவு". இதில் பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி,  ஹரி ஆகியோர் நடிக்கின்றனர்.
கெளதம் மேனன் இயக்கும் படத்தின் பெயர் "வான்மகள்".  இதில் சிம்ரன், கெளதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கருத்துரையிடுக

0 கருத்துகள்