ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் கிடையாது

பல முறை ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சொல்லியும் பலரும் ஹெல்மெட் அணியாமல் வருவதைக் காண முடிகிறது. சிலர் வண்டியின் முன்பக்கம் ஹெல்மெட்டை வைத்துக் கொண்டு போலீஸ் வந்தால் மாட்டிக் கொண்டு செல்வார்கள். 

 ஹெல்மெட் அணியாமல் வந்தால் அபராதம் என்று சொன்னால் கூட கட்டிவிட்டு போய்விடுகிறார்கள். ஏனெனில் பெரும்பாலான சமயங்களில் போலிஸில் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்ற மனநிலையும், அப்படியே வசமாக சிக்கினால் அபராதம் கட்டிவிட்டு தப்பித்து விடுவதும் இருந்து வந்தது. 
இந்த நிலையில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என்ற உத்தரவை சென்னை போலீஸ் நடைமுறைக்கு கொண்டுவர இருக்கிறது. இதனால் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்தாக வேண்டும் என்ற நிலை வந்திருக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்