செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு; சென்னை தாங்குமா?

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்படுகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் அடி. நீர் வரத்து 22 அடியை நெருங்கும்போது தண்ணீர் திறந்துவிடப்படும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் நிவர் புயலின் காரணமாக மூன்று நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீர்திறந்துவிடப்பட்டுள்ளது. 

2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளம் என்பது தொடர் மழைப் பொழிவாலும், செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டதாலும் வந்ததே. இப்போதும் அதேபோலான நிலையை சென்னை எதிர்கொள்ள இருக்கிறது. 
ஒருமணி நேர மழைக்கே சென்னை தாங்காமல் அங்கங்கே வெள்ளம் போல காட்சியளிக்கும் நிலையைக் காண முடிகிறது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் திறப்பாலும், நிவர் புயல் கரையைக் கடக்கும் மையத்திற்கு வந்ததும் தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு கிட்டத்தட்ட பத்து மணி நேரத்துக்கு மழை இருக்கும் என்பதாலும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 


தமிழக அரசின் முன்னேற்பாடுகள், பேரிடர் மேலாண்மையின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை இனிதான் காணப்போகிறோம். புயலுக்கும், வெள்ளத்துக்கும் தயாராக இருக்கிறதா சென்னை?  என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

ஆனாலும் புயலையும் மழையையும் மக்கள் எதிர்கொள்ள பல ஆலோசனைகளை அரசு வழங்கியிருக்கிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்