குழந்தைகளால் குழந்தைகளுக்கு நடத்தப்படும் ’தேன் சிட்டு’

வானம் மற்றும் நூல்வனம் பதிப்பகக்  குழுமத்திலிருந்து வெளிவரும் “தேன்சிட்டு” சிறார் மாத இதழை வாழ்த்துவோம்.

குழந்தைகளுக்காக குழந்தைகளே ஆசிரியர்களாக இருந்து நடத்தும் மாத இதழ் என்பது இதன் சிறப்பு.

சிறுகதைகள், மழலையர் பாடல்கள், நூல் அறிமுகம், அழகழகான ஓவியங்கள் என உலகளாவிய குழந்தைகளின் படைப்புகள் சிறார் இலக்கிய உலகிற்கு புதிது தான்..

அறிவியல் செய்திகள் / அறிவியல் அறிஞர்களின் செய்திகளுக்குப் பக்கங்கள் ஒதுக்க வேண்டும்.சைஸ் இன்னும் கொஞ்சம் பெரியதாக ஆக்க வேண்டும். பக்கங்களும் இன்னும் கூடுதலாக்க வேண்டும். இதெல்லாம் ..நீங்கள் சந்தாதாராரக மாறுவதன் மூலம், உங்கள் குழந்தைகளின் படைப்புகளை அனுப்புவதன் மூலம் சாத்தியப்படும்.

விலை : பத்து மட்டும்
ஆண்டுச் சந்தா : 200 – (தபால் செலவு உட்பட)

உங்கள் படைப்புகள் அனுப்ப வேண்டிய mail ID : mvmmanikandan@gamil.com

சந்தா மற்றும் வியாபார விசாரணைக்கு : +91 91765 49991

குழந்தை படைப்பாளிகளை உருவாக்கும் தேன்சிட்டு இதழுக்குத் துணை நிற்போம்.

நந்தா, திருச்சி

கருத்துரையிடுக

0 கருத்துகள்