சித்த மருத்துவர் ஜெயரூபா
ஹார்மோன்கள் சொல்லும் எச்சரிக்கை
பகுதி 1
இருபது முப்பது
வருடங்களுக்கு முன்பு தினமும் மாத்திரை சாப்பிடுவது என்பது நமது பழக்கங்களில் இல்லாத
ஒன்று. ஆனால் இன்றைக்கு தினம் ஒரு மாத்திரை சாப்பிடாமல் இருக்க முடியாது என்கிற நிலை
வந்திருக்கிறது. குறிப்பாக தைராய்டு வந்தவர்கள் காலையில் சாப்பிடுவதற்கு முன்பு மாத்திரை
எடுத்துக் கொள்வார்கள். தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரை வாழ்க்கை முழுவதும்
மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒருமுறை வந்துவிட்டால்
போதும் மாத்திரை எடுத்தே ஆக வேண்டும் என்கிறார்கள்.
இந்த
இருபது முப்பது வருடங்களில் எப்படி இவ்வளவு தைராய்டு நோயாளிகள் வந்திருக்கிறார்கள்
என்கிற சந்தேகம் நமக்கு வருகிறதல்லவா.
தைராய்டுக்கு
வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டுமா?
மருந்து எடுத்துக்
கொள்வதால் தைராய்டு நோய் சரியாகுமா? என்பதையும் தெரிந்துகொள்வோம்.
தைராய்டுக்கு
மாத்திரை எடுத்துக் கொள்வதால் உண்டாகும் பக்கவிளைவுகள் என்ன தெரியுமா? இவற்றையெல்லாம்
தெரிந்துகொள்வோம்.
தைராய்டு மாத்திரையின் பக்கவிளைவுகள்
உடல் எடை கூடிவிடும்
பெண்களாக இருந்தால்
மாதவிடாய் சீராக இருக்காது
ஆண்களாக இருந்தால்
ஆண் தன்மையில் பிரச்சினை இருக்கும்
தோல் சம்பந்தபட்ட
நோய்கள் வரும்
முடிகொட்டுவது
அதிகமாக இருக்கும். முடி மெல்லியதாகும். வறட்சியாகும், உடைந்துபோகும்
இவை தவிர மன
அழுத்தம் உண்டாகும். பெண்கள் அடிக்கடி சொல்வது, காலிங் பெல் அடித்தால் கூட பதற்றமாகிறது.
ஒரு போன் ரிங் வந்தால் பதற்றமாகிறது என்பார்கள். இவையெல்லாம் மனதளவில் வரக்கூடிய பிரச்சினைகள்.
எவ்வளவு சாப்பிட்டாலும்,
ஓய்வு எடுத்தாலும் சோர்வாகவே இருப்பார்கள்.
தைராய்டு மாத்திரை
எடுத்துக் கொள்ளும்போது எந்த பிரச்சினையுமே சரியாகாது.
ஒன்று அல்லது
இரண்டு கிலோ எடை குறைகிறது. மனதளவில் இருக்கக்கூடிய பிரச்சினைகள், உடலில் வரக்கூடிய
பிரச்சினைகள் இவை எதுவும் சரியாவதில்லை. ஆனாலும் தொடர்ந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள்.
இந்த சூழலில்
நமக்கு ஒரு சந்தேகம் வர வேண்டும்? நாம் தைராய்டுக்கு சரியான மருத்துவம் பார்க்கிறோமா?
உண்மையிலேயே இதற்கு இதுதான் மருந்தா?
நாம் சாப்பிட
வேண்டுமெனில் கையால் அள்ளி வாயில் வைத்தால்தான் பசி அடங்கும். அதை விட்டுவிட்டு வாயால்
சாப்பிடாமல் மூக்கால் சாப்பிட நினைத்தால் பசி தீருமா? அப்படித்தான் தைராய்டு நோய் குணமாகாமல்
இருக்கிறது.
தைராய்டு என்பது உண்மையில் என்ன?
தைராய்டு இருக்கலாம்
என சந்தேகப்படக் கூடிய ஒருவருடைய இரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.
அதில் டி.எஸ்.ஹெச்.
அளவு குறைவாக இருக்கிறது. அடுத்து நீங்கள் வாழ்நாள் முழுக்க மருந்து எடுத்துக் கொள்ள
வேண்டும் என்று சொல்லிவிடுகிறார்கள்.
தைராய்டு ஹார்மோனின்
பிரச்சினை என்பது தைராய்டு ஹார்மோனுடன் மட்டும் தொடர்புடையதல்ல. அதற்கு இன்னும் நிறைய
காரணங்கள் இருக்கிறது.
தைராய்டு பிரச்சினை
என்பது 98 சதவீதம் வேறு ஒரு பிரச்சினையுடைய தொடர்ச்சியின் வெளிப்பாடாகத்தான் வருகிறது.
இரண்டு சதவீதம் பேருக்கு
அதிகம் கதிர்வீச்சு ஏற்படக்கூடிய பகுதியில் இருப்பதாலோ, அல்லது எக்ஸ்ரே எடுக்கப்படும்
இடத்தில் இருப்பதாலோ வருகிறது.
இந்த 98 சதவீதம்
பேருக்கு வேறு ஒரு உடல் தொந்தரவின் காரணமாக தைராய்டு குறைகிறது அல்லது கூடுகிறது. உடனே
மாத்திரை எடுத்துக் கொள்கிறோம். பிறகு என்னாகிறது? கொஞ்சம் வேலை செய்துகொண்டிருந்த
தைராய்டு ஹார்மோனும் வேலை செய்யாமல் போகிறது. மாத்திரை அந்த வேலையை செய்யட்டும் என்று
இயற்கையாக சுரக்கும் ஹார்மோன் நின்றுபோகிறது. இதன்பின்னர் நிரந்தரமான தைராய்டு நோயாளியாக
மாறிப்போகிறோம். வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதன்
காரணம் இதுதான்.
தினமும் வீட்டில்
துணி துவைப்பது, சமைப்பது, சுத்தப்படுத்துவது என அனைத்து வேலைகளையும் செய்கிறீர்கள்.
பின்னர் வேலைக்கு ஆள் வைக்கிறீர்கள். சில வருடங்கள் கழித்து தீடீரென ஒருநாள் வேலைக்கு
ஆள் வராமல் போகும்போது உங்களால் அந்த வேலையை செய்ய தொடர்ந்து செய்ய முடியுமா? கிட்டத்தட்ட
இதுபோல்தான் தைராய்டுக்கு மாத்திரை எடுத்துக் கொள்வதும்.
உடலைப் பற்றி
எந்த புரிதலும் இல்லாமல் மாத்திரை எடுத்துக் கொள்ளும்போது அது நிரந்தரமான செயல் இழப்பைத்
தருகிறது. இப்படி மாத்திரை எடுத்துக் கொண்டு முழு நோயாளியாக மாறிப்போன பலரையும் உதாரணமாகச்
சொல்ல முடியும்.
ஒருவர் தனது
25 வயதில் தைராய்டுக்கு மாத்திரை எடுத்துக் கொள்கிறார். அவரது 30 வயதில் அவருக்கு பித்தப்பையில்
கல் வருகிறது. அதனால் அவர் பித்தப்பையை எடுத்துவிடுகிறார். 45 வயதுக்கு மேல் கருப்பையில்
கட்டி வருகிறது. கருப்பையையும் நீக்கி விடுகிறார். 55 வயதுக்கு மேல் அவருக்கு மார்பகப்
புற்றுநோய் வருகிறது.
அதாவது நமது
உடம்பு தைராய்டு அதிகமாவதன் மூலமாகவோ, இரத்தத்தில் சர்க்கரை அதிகமாவதன் மூலமோ, இரத்த
அழுத்தம் அதிகமாவதன் மூலமோ ஏதோ பிரச்சினை என்று சொல்கிறது. நாமோ பிரச்சினைக்கான காரணத்தை
சரி செய்யாமல் பிரச்சினையை மட்டும் சரி செய்ய நினைக்கிறோம்; அதைத்தான் செய்கிறோம்.
ஒரு களைச்செடி
வளர்ந்திருக்கிறது என்று வைத்துக் கொண்டால் அதன் கிளைகளையும், தண்டையும் வெட்டுவது
சரியா? அல்லது வேரோடு பிடுங்கி எறிவது சரியா? வேரோடு எடுத்தால்தானே முழுமையாக களை நீங்கும்.
நோய்களுக்கு
நாம் அறிகுறிகளை வைத்தே சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் அது உடலின்
ஒட்டுமொத்த பிரச்சினையாக மாறிவிடும். நமது உயிருக்கே பாதகம் தரக்கூடிய ஒன்றாக மாறுகிறது.
பொதுவாக தைராய்டு
மட்டும் சரியில்லை என்று பார்க்கிறோம். ஆனால் உடலின் உறுப்புகள் ஒன்றையொன்று சார்ந்து
இருக்கின்றன. அதாவது தைராய்டு, பான்கிரியாஸ், வயிறு உள்ளிட்ட ஒவ்வொரு உறுப்பும் ஒன்றையொன்று
சார்ந்து இருக்கின்றன.
உடலில் ஏதோ
ஒரு காரணத்தால் பிரச்சினைகள் உண்டாகும்போது முதலில் ஹார்மோன்களைத்தான் பாதிக்கும்.
அதன் மூலமாக உடலில் பிரச்சினை இருக்கிறது, உள்ளே கழிவுகள் தேங்கி இருக்கிறது, வாழ்க்கை
முறை ஆரோக்கியமாக இல்லை, உணவு முறை சரியாக இல்லை, எண்ண ஓட்டம் சீராக இல்லை, சீரான சுவாசம்
இல்லை என்பதைச் சொல்கிறது.
சீராக சுவாசிக்காவிட்டால்
நோய் வருமா? என்று சிலர் கேட்கலாம். எப்படி சுவாசிக்க வேண்டும் என்பதை சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
நமது சுவாசம் சரியாக இல்லையென்றால்கூட நோய் வரும். தைராய்டுக்கும் இதில் நிறைய பங்கு
இருக்கிறது.
உணவு என்கிற
பெயரில் நாம் சாப்பிடும் அல்லது வயிற்றுக்குள் தள்ளும் ஒவ்வொன்றிலும் கவனம் இருக்க
வேண்டும். இதையெல்லாம் நாம் சரிசெய்யும்போது தைராய்டுக்கு நிரந்தரமாக ஒரு தீர்வைக்
காண முடியும். வாழ்நாள் முழுதும் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் வராது.
(தொடரும்)
0 கருத்துகள்