தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை எக்மோரில் இருந்து இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் 24 ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
நாளை மாலை அதி தீவிர புயலாக மாறி நிவர் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடதமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும் நிலையில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
சென்னை மாநகராட்சியில் புயலின் தாக்கம் தொடர்பாக தொடர்பு கொள்ள கொடுக்கப்பட்டுள்ள புதிய எண் - 1913
0 கருத்துகள்