முதலமைச்சர் எடப்பாடி உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து சிறிது நேரம் உரையாற்றினார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் உடன் வந்திருந்து வாழ்த்தினார்.
காலையில் முதல் ஆளாக பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் நந்தனத்தில் இருக்கும் தோழர் ஆர்.நல்லகண்ணுவின் இல்லத்திற்கு வந்து வாழ்த்தினார்.
மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் வந்திருந்து வாழ்த்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் நேரில் வந்து வாழ்த்தினார். வை.கோ, திருநாவுக்கரசு என பலரும் வாழ்த்துகளை நேரில் வந்து தெரிவித்தனர்.
நல்லகண்ணுவின் இல்லத்தில் சி.மகேந்திரனின் ’ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்’ நூலின் மறுபிரதியை தோழர். ஆர்.நல்லகண்ணு வெளியிட ஓவியர் ட்ராட்ஸ்கி மருது பெற்றுக்கொண்டார்.
இந்திய அஞ்சல் துறையைச் சேர்ந்த நண்பர்கள் தோழர்.ஆர்.நல்லகண்ணுவின் படம் கொண்ட அஞ்சல்தலையை பரிசாக வழங்கினர்.
தமிழகம் முழுக்க அனைத்து பகுதியில் இருந்தும் போன் மூலமும், நேரிலும் மக்கள் இடைவிடாமல் வாழ்த்தியும் வணங்கியும் செல்கின்றனர். அனைத்து தரப்பு அன்பினையும் ஏற்றுக்கொண்டு ஓய்வையும் ஒத்திப் போட்டு புன்னகையோடு இருக்கிறார் தோழர்.ஆர்.நல்லகண்ணு.
0 கருத்துகள்