பிரபல அமெரிக்க நடன இயக்குனர் ஆன் ரெயின்கிங் காலமானார்


அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடன இயக்குனர் ஆன் ரெயின்கிங் காலமானார். அவருக்கு வயது 71. சென்ற வாரம் அவரது குடும்பத்தினரைப் பார்க்க சியாட்டலுக்குச் சென்றபோது இறந்துவிட்டார். இறப்புக்கான காரணம் தெரியவில்லை. 
இவர் சீரியல் நடிகையாக மட்டுமின்றி மிகச் சிறந்த நடனக்கலைஞராக பெயர் பெற்றவர். இவர் மிக முக்கியமான விருதாக கருதப்படுகிற டோனி விருது பெற்ற நடனக் கலைஞர். இவரது நடன அசைவுகளுக்காக பலரது பாராட்டுக்களைப் பெற்றவர். பாலட் டான்சராக புகழ் பெற்ற இவர் சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். 

171 செ.மீ உயரமுடைய இவர் நடனம் காண்போரைக் கவரக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு நான்கு முறை திருமணம் நடந்திருக்கிறது. இவரது மகன்களில் ஒருவர் மரபணுக்குறைபாட்டோடு பிறந்தவர். தனது மகனைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு பவுண்டேஷனைத் தொடங்கி நடத்தி வந்தார். அந்த நோய் குறித்து ஒரு ஆவணப்படத்தையும் இயக்கியிருக்கிறார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்