பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாகவும், இந்த வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவுவதாக செய்திகள் கூறுகின்றன. நவம்பர் மாதத்திற்கு பிறகு கொரோனா வைரஸ் தன்னுடைய உருமாற்றத்தை அதிகப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஜெர்மனி, ஆஸ்திரேயா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் எல்லைக்கட்டுப்பாட்டையும், பொது முடக்கத்தையும் அறிவித்திருக்கின்றன. இந்நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த ஐந்து பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். சென்னை வந்த அவரை வீட்டுத் தனிமையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக வரும் டிசம்பர் 31 வரை யுனைட்டட் ஆஃப் கிங்டம்ஸ் விமானப் போக்குவரத்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. 

2021 ஆம் ஆண்டில் சர்வதேச எல்லைகள் மூடப்படும் என்ற செய்தியும் ஒருபக்கம் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்