சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விக்கெட் வீழ்த்திய தமிழக வீரர்

சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் நடராஜன் தனது முதல் விக்கெட்டை எடுத்து சாதனைப் பயணத்தைத் துவக்கியிருக்கிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த வீரரான நடராஜனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டியிருக்கிறார்.அதே போல் திமுக தலைவர் ஸ்டாலின் தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் உள்பட பலரும் பாராட்டி வாழ்த்தியுள்ளன்ர். 

கடைசி இரண்டு ஓவர்களில் 1,0,0,1,2,விக்கெட், 1,1,0,1,1 என்று அவர் எடுத்த விக்கெட்டும், கொடுத்த ரன்னும் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. 

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, Natarajan is an inspiration to come and play for the country from that background’ என்று தெரிவித்திருக்கிறார்.

கேப்டன் விராத் கோலி உச்சிதொட்டு பாராட்டும் படம் அனைவரின் கவனத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்