குரோஷியாவில் நிலநடுக்கம் - நகரில் பாதி அழிந்துபோனது

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோஷியாவில் 6.3 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அந்த நகரில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

போஸ்னியா, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி செர்பியா, ஸ்லோவேகியா, ஆஸ்ட்ரியா உள்ளிட்ட பக்கத்து நாடுகளும் பாதிப்படைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 


கடந்த 140 வருடங்களில் நடந்த மிக மோசமான நிலநடுக்கம் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 1880ல் இதேபோல ஒரு நிலநடுக்கம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்நிலநடுக்கத்தில் ஏழு பேர் மரணமடைந்திருப்பதாகவும், 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. 20,000 கட்டிடங்கள் சேதம் அடைந்திருக்கிறது. 2020ம் வருடத்தில் கொரோனாவில் ஆரம்பித்து இப்போது நிலநடுக்கத்தில் முடிந்திருப்பது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஜப்பானில் அணுகுண்டு வீச்சு நடந்தபோது ஹிரோஷிமா பாதிக்கப்பட்டதைப் போல இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்