டெல்லியில் நிலநடுக்கம்

இந்திய தலைநகர் டெல்லியில் வியாழன் (17/12/20)  இரவு 11. 30 மணி அளவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த செய்திகளும் இல்லை. மிக குறைந்த அளவில் 5 முதல் 7 வினாடிகள் மட்டுமே நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. டெல்லியில் இதே போல் அவ்வப்போது மிக குறைந்த ரிக்டர் அளவில் நிலநடுக்கம் வருகிறது. இதனால் மக்களுக்கோ உடமைகளுக்கோ சேதாரம் இல்லை. ஆனால் நிலத்தில் சிறிய அளவிலான விரிசல் ஏற்படுவது உண்டு. 

வேளாண் சட்டங்களுக்காக விவசாயிகள் போராடிவரும் நிலையில் நிலநடுக்கம் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும் எப்போதும் போல மீம்ஸ் க்ரியேட்டர்ஸ் இந்த நிலநடுக்கமும் டெல்லி மக்களை ஒன்றும் செய்யாது என்று பரப்பிவருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்