போராட்டக் களத்திலிருந்து விவசாயிகளே உருவாக்கிய யூட்யூப் சேனல்

வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் மூன்று வாரங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டத்துக்கு ஆதரவு தந்த சீக்கிய மத குரு தற்கொலை, உடல் நலக்குறைவு, கடும் குளிர் மற்றும் விபத்து உள்ளிட்ட காரணங்களால் 33 விவசாயிகள் மரணம் என நாளுக்கு நாள் போராட்டக்களம் பதற்றத்தைத் தந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் விவசாயிகள் தங்களுக்கான பத்திரிகை ஒன்றை ஆரம்பித்திருக்கின்றனர்.’ட்ராலி டைம்ஸ்’ என்ற பெயரில் வாரம் இருமுறை வரும் பத்திரிக்கை ஒன்றை டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.


இதுமட்டுமின்றி யூட்யூப் ஒன்றையும் விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர்.வேளாண் அமைச்சர் போராட்டத்தில் 1 இலட்சம் விவசாயிகள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர் என்று கூறியிருக்கிறார்.  டிசம்பர் 25 ஆம் தேதிக்குள் 10 லட்சம் சப்ஸ்க்ரைபர்களை எட்டிக் காண்பிப்பதாக பிரதமருக்கு சவாலாக ஆரம்பித்துள்ளனர். ஆரம்பித்து நான்கு நாட்களுக்குள் 6 இலட்சம் சப்ஸ்க்ரைபர்களைக் கடந்திருப்பது விவசாயிகளுக்கான போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரும் ஆதரவு. Kisan Ekta Morcha என்ற பெயரில் விவசாயிகள் ஆரம்பித்திருக்கும் யூட்யூப் சேனலுக்கு ஆதரவு தர இந்த லிங்கைக் கிளிக் செய்யவும்.  Kisan Ekta Morcha - YouTube

லைவ் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன. சாட் பாக்ஸில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் கணக்கிலடங்கா ஆதரவு பெருகிவருகிறது குறிப்பிடத்தக்கது. 

தனக்கான ஊடகம் ஒன்றை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்பதற்கும், சரியான கொள்கை இருந்தால் அது மிகப் பெரும் சாதனைகளைச் செய்யும் என்பதற்கும்  இது ஓர் சிறந்த உதராணம். ஆனால் தனக்கான உணவை ஒரு தனிநபரால் உருவாக்கிக் கொள்ள முடியுமா? என்பது நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய நேரமிது. 

உலகம் இதுவரை கண்டிராத போராட்டக் களமிது என்பது குறிப்பிடத்தக்கது. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்