ரஜினியின் மக்கள் சேவைக் கட்சி - பெயர் முன்னரே பதிவு செய்ததா?

ரஜினி கட்சி தொடங்குவதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இதோ கட்சியின் பெயரை பதிவும் செய்துவிட்டார். கட்சியின் பெயர் மக்கள் சேவைக் கட்சி. 

முன்னதாக அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததை இப்போது மக்கள் சேவைக் கட்சி என பெயர் மாற்றி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

இப்போது இருக்கும் கட்சி பெயர்களில் பொதுவாக உள்ள திராவிடம் என்பது இதில் இல்லை. நடிகர் கமலஹாசனின் கட்சியிலும் இல்லை. கமலுக்கும் ரஜினிக்கும் உள்ள கட்சிப் பெயர்களில் உள்ள ஒற்றுமை மக்கள் எனும் வார்த்தை மட்டுமே. 


இதற்கு முன் திமுக - திராவிட முன்னேற்றக் கழகம், அதிலிருந்து பிரிந்த அதிமுக - அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அதன் பின் வந்த விஜயகாந்த் தேமுதிக - தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று பெயர் வைத்தனர்.

ஆனால் அதன் பின் தோன்றிய கட்சிகள் திராவிடத்தை தனது கட்சியின் பெயர்களில் கூட சேர்க்கவில்லை. மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி, மக்கள் சேவைக் கட்சி என்று வைத்திருக்கின்றனர். 

மக்கள் சேவைக் கட்சிக்கு பாபா முத்திரையை சின்னமாகக் கேட்டு கிடைக்காமல் ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் பிரசாரத்தின்போது பாட்ஷா படத்தின் நான் ஆட்டோக்காரன் பாடலை ஒலிபரப்ப கட்சித் தொண்டர்கள் தயாராக இருப்பார்கள். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்