இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே டி 20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்ட பாண்டியா இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜனின் சிறப்பான பந்து வீச்சே வெற்றிக்குக் காரணம் என்று புகழாரம் சூட்டியது நடராஜனே ஆட்ட நாயகனானது போல ரசிகர்கள் மகிழ்ந்தனர்.
அதேபோல இந்திய கேப்டன் விராத் கோலியும் தனது கையிலிருந்த கோப்பையை நடராஜனிடம் கொடுத்தது அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சியைத் தந்தது.
இந்திய அணியில் நடராஜனின் சிறப்பான ஆட்டத்தால் பும்ரா ஓரங்கட்டப் பட்டிருப்பதாக தெரிகிறது. இதற்கு நடராஜனின் திறமைதான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், அடுத்து டெஸ்ட் போட்டிகளில் பும்ரா களமிறங்க இருப்பதால் அவருக்கு ஓய்வு கொடுக்கும்விதமாக கோலி செயல்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் நடராஜனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
1 கருத்துகள்
Nataraj rocks
பதிலளிநீக்கு