அடுத்த அதிரடிக்கு ரெடியாகும் தளபதி விஜய்

மாஸ்டருக்காக ஒரு பக்கம் பரபரப்பும், இன்னொரு பக்கம் அடுத்த படத்துக்கான அறிவிப்புமாக தளபதி விஜய் செம பிஸி.

இதோ தளபதி 65 அறிவிப்பு வந்துவிட்டது. விஜயின் 65 வது படத்தை  சன் பிக்ஸர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். நெல்சன் இயக்குகிறார்.



கைதி ரிலீசுக்கு முன் இயக்குனர் லோகேஷ் தளபதி 64 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதோ மாஸ்டர் ரிலீஸ் ரேஸில் இருக்கிறார்.

டாக்டர் ரிலீசுக்கு முன் இயக்குனர் நெல்சனுக்கு தளபதி 65 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்த அதிரடிக்கு ரெடியாகிறார் விஜய்.

இளம் இயக்குனர்களை சரியாக அடையாளம் கண்டு தனது அடுத்தடுத்த படங்களை இயக்கும் வாய்ப்பைக் கொடுப்பது விஜயின் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

 நயன்தாரா நடித்து வெற்றிபெற்ற கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் என்கிற படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த படம் ரிலீசுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. 
இப்போது நெல்சன் தளபதி 65 படத்தை இயக்கப் போவதாக அறிவிப்புகள் வந்துள்ளன. 

கருத்துரையிடுக

1 கருத்துகள்