ஆந்தாலஜி கதைகள் தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குனர்களையும் ஈர்த்துள்ளது. வெற்றிப்படங்களின் இயக்குனர்கள் நால்வர் இயக்கி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ’பாவக் கதைகள்’ பெயருக்கேற்றாற்போல் பாவக் கதைகளாகவே இருக்கின்றன. நான்கு இயக்குனர்களின் நான்கு கதைகளும் ஆணவக் கொலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கின்றன.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் பண்ணா உட்றனும்’ என்ற படத்தில் அஞ்சலி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கெட்ட வார்த்தைகள் புழங்குவதெல்லாம் வேற லெவல்(?!)
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ’வான்மகள்’ கதையில் சிம்ரன், கெளதம் மேனன் நடித்துள்ளனர். பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு மட்டுமல்லாமல் ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கும் பதற்றத்தை ஏற்படுத்துகிற க்ளைமாக்ஸ்.
ஒவ்வொரு எபிசோடாக சீரிஸ் போல தனித்தனியாக பார்க்கும்படி இருந்தாலும் எல்லா கதைகளும் சமூகத்தின் அழுத்தத்தை பார்வையாளர்களிடம் கடத்துகிறது.
அனைத்து எபிசோடிலும் கதைக்கான பாத்திரங்கள் பொருத்தமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. சாய்பல்லவி நிஜமாகவே கர்ப்பிணியாக இருப்பதுபோல் காட்டியிருப்பது கலக்கல். பின்னணி இசையும் கதைக்கு கூடுதல் உயிரோட்டத்தைக் கொடுக்கின்றன.
0 கருத்துகள்