அடுத்து நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை

நிவரைத் தொடர்ந்து வந்திருக்கும் புரெவி புயலால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரை  1978, 1992, 2000 ஆகிய வருடங்களில் புயல் கடந்திருக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு புரவி புயல் இலங்கை வழியாக கன்னியாகுமரி வருகிறது. இன்றிரவு இலங்கையின் திரிகோணமலையில் நிலைகொள்ளவிருக்கிறது புரவி புயல். 

அடுத்து மன்னார் வளைகுடாவில் நிலை கொள்ளும். பாம்பம், இராமேஸ்வரம், தொண்டி, இராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் மணிக்கு 50 -60 கி.மீ வேகத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 

டிசம்பர் 3 முதல் 5 வரை டெல்டா மாவட்டங்களானநாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். 

மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, தென்காசி, விருதுநகர் , கொடைக்கானல், பாபநாசம், குன்னூர், கன்னியாகுமரி, மாஞ்சோலை, திருநெல்வேலி,  திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளும் காற்றுடன் கூடிய மிக அதிக கனமழை பெய்யும். 

இன்று இரவிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். 

பாண்டிச்சேரி, கடலூர் பகுதிகளும் மழை பெறும். அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கரூர், திருப்பூர் பகுதிகளில் நல்ல மழை பெய்யக்கூடும். 

சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், நாமக்கல், கள்ளக்குறிச்சி பகுதிகளிலும் ஒன்றிரண்டு நாட்கள் மழை வரலாம். 

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 3 முதல் 6 வரை மழை பெய்யும். 

ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. 

எனவே தமிழகம் அடுத்த நான்கு நாட்களுக்கு புரவி புயலால் மழையைப் பெறலாம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்