தமிழகத்தில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு

புரவி புயலால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது தெரிவித்திருக்கிறார். 


’புரவி புயல் இன்னும் மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலை கொண்டு உள்ளது. பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையில் கரையை இன்று கடந்து அரபிக்கடல் நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 


இதனால் இன்று தமிழகத்தின் டெல்டா மற்றும் வட தமிழகத்திலும் மழை பெய்யக்கூடும். 

கடலூரில் வெள்ளம் வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஏனெனில் மழைப்பொழிவின் அளவு 300 மி.மிக்கு மேல் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி இன்று (04.12.2020) 
200 மி.மி க்கு மேல் மழை பெய்யக்கூடிய இடங்கள்

சிதம்பரம், கடலூர் - 340
கொள்ளிடம், நாகை - 337
அண்ணாமலை நகர், கடலூர் - 329
கொத்தவால்சாவடி, கடலூர் -329
லால்பேட்டை, கடலூர் - 296
பறங்கிப்பேட்டை, கடலூர் - 264
காட்டுமன்னார் கோயில் - 264
குறிஞ்சிப்பாடி, கடலூர் - 249
மணல்மேடு, நாகை - 247
இராமேஸ்வரம், இராமநாதபுரம் - 204
திருத்துறைப்பூண்டி, திருவாரூர் -220

தஞ்சாவூர், நாகை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் மிக அதிக கனமழை
பெய்யக்கூடும். 

சென்னையிலும் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்றும் மழை பெய்யக்கூடும். 

புரவி புயல் தொடர்ந்து ஒரே இடத்தில் நிலைகொண்டிருப்பதால் இன்று தமிழகம் முழுக்க பரவலாக மழை கிடைக்கும். திருப்பூர், திண்டுக்கல், கோயம்புத்தூர் பகுதிகளிலும் மழை பெய்யும். 

கன்னியாகுமரியிலும், திருநெல்வேலியிலும் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும்.

இதன் பிறகு டிசம்பர் 8 முதல் 16 வரை மழை இருக்காது. டிசம்பர் 16க்கு மேல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்