’என்னை மன்னியுங்கள்’ - ரஜினி உருக்கம்

ரஜினி கட்சிப் பெயரை அறிவிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் இப்போது உடல் தேறி வீடு வந்து சேர்ந்துவிட்டார். எப்போது கட்சி அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் கட்சி அறிவிக்கப் போவதில்லை என்ற அறிவிப்பு வந்திருக்கிறது.
இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று சிலரும், இதை எதிர்பார்க்கவில்லை என்று சிலரும் கருத்துச் சொன்னாலும் ஒவ்வொருவரின் சூழலும், நேரமுமே ஒரு செயலை முன்னெடுப்பதைத் தீர்மானிக்கும்.

ரஜினிக்கு வெளியிலிருந்து அழுத்தம் அதிகமாகி இருக்கிறது. அதனால்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று செய்திகள் கூற, அவர் கண்ணிலேயே அவரது சோர்வு தெரிகிறது என்று நெட்டிசன்கள் கூற எது எப்படியோ அரசியல் களத்தில் ஒரு கை குறைகிறது என்றுதான் சொல்ல முடிகிறது. 

’இது மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் என்னை மன்னியுங்கள்’ என்றும் , ’உடல் நலன் குறித்த எச்சரிக்கையாகவே எடுத்துக் கொள்கிறேன்’ என்றும், அவர் அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்