நடிகர் சரத்குமாருக்கு கொரோனா

பிரபல நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அவரது மகள் வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் வில்லனாக நுழைந்து கதாநாயகனாக உயர்ந்து முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர். 

தெலுங்கு படம் ஒன்றில் நடிப்பதற்காக சென்றிருந்தபோது அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததாகவும், இதனையடுத்து அவர் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

சரத்குமார் இப்போது ஹைதாரபாத்தில் சிகிச்சையில் இருப்பதாக அவரது மகள் தெரிவித்துள்ளார். விரைவில் நலம்பெற்று வருவார் என்று கூறியிருக்கிறார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்