இப்படியான விளையாட்டுகளில் பாக்ஸிங்கை அடிப்படையாக வைத்து பா.இரஞ்சித் இயக்கும் படம்தான் ‘சர்பட்டா’.
வடசென்னையில் 1940 முதல் 1990 காலகட்டம் வரைக்கும் திரைப்படம் எப்படி ஒரு பொழுதுபோக்கோ அப்படியான பொழுதுபோக்காக பாக்ஸிங்கும் இருந்துள்ளது. பாக்ஸிங்கின் அடிப்படை, நுணுக்கங்கள், விளையாட்டு விதிமுறைகள் என ஒரு பாக்ஸிங் க்ளப் செய்யும் அத்தனை வேலைகளையும் வடசென்னையிலும் சிலர் சொல்லிக் கொடுப்பதில் கில்லியாக இருந்திருக்கின்றனர்.
இந்த போட்டிகளை அன்றைய திரை நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர். சிவாஜி ஆகியோர் வந்து பார்த்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
ஆனால் சில நேரங்களில் விளையாட்டு வினையாகும் என்பது போல் பாக்ஸிங் விளையாட்டின்போது இறந்து போவதும், சிலர் கோமாவுக்குச் சென்றுவிடுவதும் நடந்திருக்கிறது. அதுமட்டுமின்றி விளையாட்டில் தோல்வி அடைபவர்கள் அதைத் தொடந்து தனிப்பட்ட தாக்குதல் மற்றும் கலவரங்களில் ஈடுபட்டும் வந்திருக்கின்றர். இப்படி தொடர்ந்து நடந்து வந்ததால் இந்த போட்டி பின்னர் தடை செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
பா.ரஞ்சித் இயக்கும் படங்களில் வடசென்னையின் பல கூறுகளை அசலாகக் காட்டும் மெனக்கெடலும், கடும் உழைப்பும் வெளிப்பட்டிருக்கும். இந்த சர்பட்டா படத்திலும் அதைக் காணலாம்.
படத்தில் முதல் போஸ்டர் நேற்று வெளியானது. படத்துக்காக கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வித்தியாசமான தோற்றத்தில் அசத்துகிறார் நடிகர் ஆர்யா. படத்தின் கதாநாயகியாக துஷாரா நடிக்கிறார். இவர் ஒன்றிரண்டு தமிழ் படங்களில் நடித்தவர். இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்.
0 கருத்துகள்