புரவி புயல் பாம்பன் மற்றும் இராமேஸ்வரத்துக்கு இடையே 48 மணி நேரத்திற்கு மேல் நகராமல் நிலை கொண்டிருந்தது. இதனால் கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், காற்றும் வீசியது.
டிசம்பர் 6 அன்று இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிக கன மழை பெய்யக்கூடும்.
சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மற்ற இடங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியைப் பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்னும் 10 நாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்