அ. உமர் பாரூக் எழுதிய ‘அழ நாடு’ (தேனி மாவட்ட தொல்லியல் சுவடுகள்)

பிரியா ஜெயகாந்த்

தான் பிறந்த தேனி மாவட்டத்தின் தொன்மையான வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தன் தேடலைத் தொடங்கி, பல வருட ஆய்வின், உழைப்பின் பலனாக ஆசிரியர் உமர் பாரூக் அவர்களின் “அழ நாடு” நூல் உருவாக்கப்பட்டுள்ளது. 

வரலாறு என்பது நாம் அனைவரும் அறிந்துகொள்ள விரும்பும் ஒன்றாக இருப்பினும் அதனை வாசிப்பது என்பது சிரமம் என்ற கூற்றை பொய்யாக்கும் விதமாக நூலில் உள்ள புகைப்படங்களுடனான ஆதாரபூர்வ தகவல்கள் எளிமையான மொழியில் அனைவருக்கும் புரியும் விதமாக தொகுத்திருப்பது நூலின் சிறப்பம்சம்.  


நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்ததும் நம் கண் முன் ஒரு பாரம்பரியம் மிக்க வரலாற்றை அதன் உண்மைத்தன்மையுடன் நம் மனக்கண்ணில் காட்சியாக விவரிக்கிறது அழ நாடு புத்தகம். 

தேனி மாவட்டத்தின் தொன்மையான பெயர் – அழநாடு என்ற  அறிமுகத்துடன், தொல்லியல் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகள் குறித்த விளக்கங்களையும். தொல்லியல் சார்ந்த இடங்களை அவற்றின் காலத்தைக் கொண்டு கணிப்பதற்கு எழுத்து ஒரு கருவியாக இருப்பதையும் விளக்குகிறது.  

வரலாற்றுக்கு முந்தைய பழங்கால சுவடுகள், நினைவுச்சின்னங்கள், கண்ணகி கோட்டத்தின் அமைவிடம், அதன் வரலாறு மற்றும் ரோமானியா நாணயங்களை குறித்த தகவல்களை அளிக்கிறது. 

பிற்காலச் சுவடுகள் பகுதியில் பொ. ஆ. எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்து, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான பலக் கோயில்களின் அமைவிடங்களும் அவற்றின் வரலாறும் அங்கு கண்டறியப்பட்ட  வரலாற்றுச் சின்னங்களும் அவற்றின் மூலம் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்களும், நம்மை தேனி மாவட்டத்தின் ஒவ்வொருப் பகுதியிலும் பயணித்த அனுபவத்தை அளிக்கும் விதமாக எளிமையாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

நூலின் பெயர்: அழ நாடு (தேனி மாவட்ட தொல்லியல் சுவடுகள்)
ஆசிரியர்: அ. உமர் பாரூக் 
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர், சென்னை

கருத்துரையிடுக

0 கருத்துகள்