கிறிஸ்துமஸ்க்கு ரிலீசாகும் ஜாக்கிஜானின் வான்கார்ட்

ஜாக்கிசான் நடித்த வான்கார்ட் திரைப்படம் ஜனவரி 2020ல் வெளியாக வேண்டியது. கொரோனா பாதிப்பின் காரணமாக செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்பட்டது. இப்போது டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று படம் வெளியாகும் என்று தெரிகிறது. 


ஜாக்கிசான் நடித்த குங்பூ யோகா திரைப்படத்தை இயக்கிய ஸ்டான்லி டோங் தான் இந்த படத்தை இயக்கியிருப்பவர். 50 மில்லியன் படெஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த படம் தமிழிலும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்