டாக்டர். சாந்தா காலமானார்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.சாந்தா மூச்சுத்திணறல் காரணமாக 19.01.21 அன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 94. 


இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டியின் தங்கை புற்றுநோயால் இறந்தார். இதனால் இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சை மையம் ஒன்றை ஆரம்பிக்க விரும்பினார் டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி. அதற்காக கேம்பைன் செய்தபோது டாக்டர். சாந்தாவும் அதில் சிறிய அளவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன்பின் டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டியின் மகன் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கினார். அப்போது அரசு மருத்துவமனையில் கிடைத்த பணியில் சேராமல் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து 12 படுக்கைகளுடன் உருவாக்கப்பட்டதே அடையாறு புற்றுநோய் மருத்துமனை. இன்று 500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் ஏழை மக்களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறது. 

எல்லா தரப்பு மக்களுக்கும் மருத்துவம் சென்று சேர வேண்டும் என்ற கனவுகளுடன் பயணித்த டாக்டர். சாந்தா அதனை சாதித்தும் காட்டினார். 
டாக்டர்.சாந்தாவின் மறைவுக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்