’பாப்லோ நெருடா’ குறும்பட வெளியீட்டு விழா

நெருப்புக் கவிஞன் பாப்லோ நெரூடாவின் சிவப்பு கவிதைகள் ஏற்படுத்திய புரட்சியை இன்றும் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. பாப்லோ நெருடாவைப் பற்றிய ஒரு குறும்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பகு. 

பாப்லோவ் நெருடாவின் கடைசி தினங்களை கண்முன்னே நிகழ்த்தி காட்டியிருக்கிறார் நடிகர் நாசர். அதில் அதிகாரியாக நடித்த காளீஸ்வரி மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 

இந்த குறும்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, டாக்டர். திருமாவளவன் எம்.பி, இயக்குனர் பா.ரஞ்சித், வழக்கறிஞர் பிரபாகரன், முனைவர் அரங்க மல்லிகா, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சி. மகேந்திரன், ஜி. ராமகிருஷ்ணன், ஆர்.பாலகிருஷ்ணன், இயக்குனர் கெளதமன், நடிகர் நாசர், பேராசிரியர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட  அரசியல் ஆளுமைகள், திரையுலக கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதன் விவரங்கள் அடுத்த பதிவில்...

நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்