நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும்

மாலத்தீவு மற்றும் அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத்தால் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் கேரளாவில் மழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.

’இன்றும் நாளையும் தமிழகத்தின் பல இடங்களில் கனமழைக்கு பெய்யலாம். அதன் பின்னர் ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் மழை வரக்கூடும். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஜனவரியில் மழை நமக்குக் கிடைத்திருக்கிறது.1984, 1985, 1986, 1990, 2000, 2017 ஆகிய வருடங்களில் இதே போல மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜனவரியில் பொதுவாக கிடைக்கக்கூடிய 22 mm மழை வரத்தில் ஏற்கனவே 17mm  கிடைத்துவிட்டது. இப்போது பொழியக்கூடிய மழை எல்லாமே போனஸ்’ என்கிறார் பிரதீப் ஜான்.

இந்த வருடம் வரலாறு காணாத வெப்பம் கொளுத்தும் என்று சுற்றுச்சூழல் அறிஞர்கள் சொல்லி வரும் வேளையில் இந்த மழை எல்லாம் நம் சேமிப்புக்குதான். ஆனால் சேமிக்கிறோமா? கருத்துரையிடுக

0 கருத்துகள்