நிலவைப் பார்த்து சோறூட்டும் அம்மாவிடம் நிலவைப் பிடித்துத் தா என்று கேட்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். நிலவுக்கு அழைத்துச் செல்லக் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளும் உண்டு. அந்த சிறுவயதில் உதிக்கும் சின்ன கனவுகள் காற்றில் துளிநீரைப் போல காணாமல் போய்விடும். ஆனால் அந்தச் சின்ன வயதுக் கனவின் கைபிடித்து நடைபழகி அதை இலட்சியமாக்கி தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டுள்ளார் உதய கீர்த்திகா.
ஒரு சின்னப் பெண்ணின் ஆர்வத்தை வீடு மட்டுமல்லாமல் அவரது பள்ளியும் அணையாமல் காத்து வளர்த்து வந்திருக்கிறது. தமிழ் வழியில் இந்த அளவிற்கு எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் படித்து வந்திருக்கிறார். வெறும் ஆசையும், கனவும், இலட்சியமும் மட்டும் போதாது. அதற்கு எப்பாடு பட்டேனும் தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற துடிப்போடு செயல்பட்ட உதய கீர்த்திகா அதற்கான படிப்புகள் என்னென்ன? எங்கு சென்று படிக்க வேண்டும்? என பலவற்றையும் தானே தேடித் தேடிப் படித்துள்ளார்.
ஒரு விண்வெளி வீரராகும் கனவை நோக்கிச் செல்ல ஆயத்தமான உதய கீர்த்திகாவுக்கு பொருளாதாரம் பெரிய பின்னடைவு. என்றாலும் ஒரு இலட்சியத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு முழு முயற்சியோடு உழைக்கும் ஒருவருக்கு உதவி எல்லா பக்கங்களிலிருந்தும் கிடைக்கும். கல்வித் தகுதி மட்டுமே இதற்கு போதுமானதல்ல. உடலையும், மனதையும் தகுதிப்படுத்திக் கொண்டால் மட்டுமே இந்த கனவை எட்ட முடியும் என்பது உதய கீர்த்திகாவுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் ஓய்வு என்பதே அறியாமல் நேரத்தைத் துரத்திச் சென்று படித்து முடித்திருக்கிறார்.
இஸ்ரோ நடத்திய போட்டிகளில் இரண்டு முறை முதல் பரிசைப் பெற்றவர். போலந்து நாட்டில் ஏர்க்ராப்ட் மெயிண்டனன்ஸ் இன் ஜினியரிங்கில் விணவெளி வீரர்களுக்கான பத்து விதமான பயிற்சிகளை முடித்திருக்கும் உதய கீர்த்திகா இன்னும் ஒரே ஒரு பயிற்சியை முடித்துவிட்டால் இந்தியாவின் ககன்யான் மிஷனில் விண்வெளிக்குச் செல்வதற்காக தகுதி வந்துவிடும். பதினோராவது பயிற்சியான பைலட் பயிற்சியினை ஜெர்மன் சென்று படிக்க இருக்கும் உதய கீர்த்திகாவுக்கு மீண்டும் பொருளாதார உதவி தேவைப்படுகிறது. விண்வெளி வீரருக்கான பயிற்சியை முடித்திருக்கும் ஒரே இந்தியப் பெண் என்ற பெருமை உதய கீர்த்திகாவுக்கு மட்டுமே இருக்கிறது.
உதய கீர்த்திகா ஏற்கனவே முடித்திருக்கும் பத்துவித பயிற்சிகளுக்கு இதுவரை 50 இலட்சம் வரைக்கும் செலவாகியிருக்கிறது. இப்போது படிக்க இருக்கும் பைலட் பயிற்சிக்கு மட்டுமே 50 இலட்சம் தேவைப்படுகிறது. உதய கீர்த்திகாவின் கனவை அறிந்த பலரும் இது ஒரு பெண்ணின் கனவு மட்டுமல்ல ஒரு நாட்டின் கனவாக கருதி உதவி செய்து வருகின்றனர்.
முன்பின் முகமறியாத பலரும் எங்கெல்லாம் இருந்து 500, 1000 முதல் இலட்சங்கள் வரை வழங்கிய உதவியில் படித்திருக்கிறார் உதய கீர்த்திகா. இதோ கைக்கெட்டும் தூரத்தில் தன் இலட்சியத்தை அடைய ஒரு வருட பைலட் படிப்பிற்கு தேவைப்படும் உதவியை எதிர்பார்த்திருக்கிறார்.
உதவி செய்ய
BANK ACCOUNT DETAILS
Name : D. Udhayakeerthika
A/c No. : 34887879066 (Savings Account)
Bank : State Bank of India
Branch : Theni
IFSC CODE: SBIN0002277
Cell Number: 96268 50509
0 கருத்துகள்