இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது. ஏனெனில் இங்குதான் எதை வேண்டுமானாலும் விற்கவும் முடியும், எதை வேண்டுமானாலும் வாங்கவும் கூடும்.
ஆனால் எதை வாங்குகிறார்கள், எதை விற்கிறார்கள் என்று பார்த்தால் நீதி, காவல், நாட்டின் இறையாண்மை ஆகியவற்றை வாங்கி விடுவதும், நேர்மை, உரிமை, தியாகம் ஆகியவற்றை விற்றுவிடுவதும்தான் நடக்கிறது.
நாட்டின் அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கிக் குரலெழுப்பினால் நெறிக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதும் இருந்தாலும் வந்துகொண்டே இருக்கின்றன நூறு, ஆயிரம், இலட்சம் என குரல்களும், ஓங்கி ஒலிக்கும் குரல்கள் ஓயாது.. இதன் பின்னர் விரல்களும் தங்கள் உரிமைகளை உரத்துப் பேசும்.
இதோ எல்லாவற்றையும் வாங்கவும், விற்கவும் செய்வதுபோல விவசாயிகளை வாங்க முடியாது என்கிற வாசகம் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. #farmersarenotstadium
0 கருத்துகள்